’10 எண்றதுக்குள்ள’ ; ஆயுத பூஜைக்கு ரிலீஸாவது உறுதி..!

 

விக்ரம் நடித்துவரும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் டீசரை சமீபத்தில் வெளியிட்டு வெள்ளோட்டம் பார்த்த படத்தின் இயக்குனர் விஜய்மில்டன் உட்பட மொத்த படக்குழுவினரும், அதற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் நடந்து வந்து ஷூட்டிங் நேற்று சென்னைக்கு ஷிப்ட் ஆகி கடைசி நாள் படப்பிடிப்பை சென்னையில் நடத்தி பூசணி உடைத்துள்ளனர்.

படத்தின் ஆடியோ ரிலீஸை செப்டம்பரில் நடத்திவிட்டு படத்தை அக்டோபர்-21ஆம் தேதி, அதாவது ஆயுத பூஜையன்று ரிலீஸ் செய்வது என்றும் அறிவித்துள்ளனர். விக்ரம் – சமந்தா என்கிற புது காம்பினேஷனே படத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டிவரும் என்பது உறுதி.

10 எண்றதுக்குள்ளசமந்தாவிக்ரம்விஜய்மில்டன்