ஸ்டண்ட் இயக்குநர்களை திரைப்பட இயக்குநராக்கும் ராகவா லாரன்ஸ்


நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் மற்றும் இயக்கி நடிக்கும் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது.

பேய் படங்களை காமெடியோடு கலந்து கொடுத்து தமிழ் சினிமாவில் புதிய டிரெண்டை உருவாக்கிய ராகவா லாரன்ஸின், காஞ்சனா வரிசை படங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது ’ருத்ரன்’, ‘அதிகாரம்’, ‘சந்திரமுகி 2’ ஆகிய படங்களில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ், தனது ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்து நடிக்கும் படத்திற்கு ‘துர்கா’ என்று தலைப்பு வைத்துள்ளார். கடந்த வருடமே இப்படம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட ராகவா லாரன்ஸ், அப்போது இயக்குநர் பெயரை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், ராகவா லாரன்ஸின் ‘துர்கா’ படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவ் இயக்குகிறார்கள். இதனை ராகவா லாரன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Anbarivcinema newsDurgakollywood actor raghava lawranceRaghava Lawrancestunt directors anbarivtamil movie durga