வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய்


சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பலர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கும் நிலையில், வாக்களித்த மக்களுக்கு விஜய் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு, தளபதி அவர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வெற்றி வாகை சூடிய மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தளபதி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் அனைவரும் தமிழக மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க, மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதனை தீர்க்கும் நல்வாழ்வு பணியினை, தளபதி அவர்களின் உத்தரவுப்படி செவ்வனே செயல்படுத்தி, மக்கள் பணிகளை தொடருவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actor Vijaybeastkollywood actor vijaypussi anandThalapathy VijayVijayvijay makkal iyakkamvijay meet fans