ராம்பாலா இயக்கத்தில் சந்திரமெளலி நடிக்கும் ‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’


தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் ’2 MB’ ரகுநாதன் பி.எஸ் தற்போது தொடர் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் ’வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ எனும் புதிய படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு” படத்தில் சந்திரமௌலி நாயகனாக நடிக்கின்றார். மீனாக்‌ஷி கோவிந்தராஜன், ரெபா மோனிகா நாயகிகளாக நடிக்கின்றனர். மனோ பாலா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

செவிலோ ராஜா ஒளிப்பதிவை மேற்கொள்ள, சந்தோஷ் தயாநிதி மற்றும் K.C.பாலசாரங்கன் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். கிருஷ்ணா கலையை நிர்மாணிக்க, கே.ஜே.வெங்கட்ரமனன், படத்தொகுப்பு செய்கிறார்.

actor chandramouliActress Meenakshidirector rambalaKollywood Newsmovie newsTamil CinemaVandhan Suttan Repeatu