தனுஷை பொறுத்தவரை அவர் ஒரு நடிகராக சிறந்த படங்களை செலக்ட் செய்வதைவிட, ஒரு தயாரிப்பாளராக வெற்றிக்கு உத்தரவாதம் தரும் கதைகளை மிகச்சரியாக தேர்வு செய்கிறார் என்பதை ‘நானும் ரௌடி தான்’ வெற்றி மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.. இரண்டேகால் மணி நேரத்துக்கு நான்ஸ்டாப் காமெடி படம் என்பதால் திரையிட்ட இடங்களில் எல்லாம் காட்சிக்கு காட்சி கைதட்டலை அள்ளுகிறான் இந்த ‘ரௌடி’.
அதுமட்டுமல்ல, சிவகார்த்திகேயனைப்போல விஜய்சேதுபதியையும் அடுத்த தளத்திற்கு நகர்த்தும் உதவியையும் தனுஷ் செய்துள்ளார் என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.. இந்த வெற்றியின் சூட்டோடு சூடாக விஜய்சேதுபதியை வைத்து இன்னொரு படத்தையும் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார் தனுஷ்.