ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத் குமார் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை கே.பாபு இயக்குகிறார். ரொமான்ஸ், காமெடி, உணர்வுபூர்வமான தருணங்கள் நிறைந்த இந்த பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு, மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.
பிரபல முன்னணி நடிகர்கள் மற்றும் பெரு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதால், படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ள நிலையில், சமீபத்திய அறிவிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது. ஆம், எவர்கிரீன் ஆன் ஸ்கிரீன் ஜோடியான கே.பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் இப்படத்தில் கவின் பெற்றோராக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ‘ராசுக்குட்டி’ (1992) என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இவர்கள் இந்த படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ‘முதல் நீ முடிவும் நீ’ படப்புகழ் ஹரிஷ், ‘வாழ்’ படப்புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.
எழில் அரசு.கே ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்ய, சண்முக ராஜ் கலையை நிர்மாணிக்கிறார்.