’மாநாடு’ தயாரிப்பாளரின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது


தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் காமாட்சி, தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் ‘மாநாடு’ படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டு தயாராக உள்ள நிலையில், சமீபத்தில் வெளியான டிரைலர் 60 லட்சம் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து, ரசிகர்களும், திரையுலகினரும் ’மாநாடு’ படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க, அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளார்.


ராம் இயக்கும் இப்படத்தில் நிவின் பாலி நாயகனாகவும், அஞ்சலி நாயகியாகவும் நடிக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தனுஷ்கோடியில் தொடங்கியது.

Anjalicinematographer ekambaramDirector Rammaanaadu producerNivin pauliSuresh Kamatchisuresh kamatchi new movie startv house productions