’பேட்டரி’ படத்திற்காக ஜி.வி.பிரகாஷ்குமார் பாடிய பாடல்


செங்குட்டுவன், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகும் படம் ‘பேட்டரி’. மணிபாரதி இயக்கும் இப்படத்தை ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படமான இப்படத்தின் கதை மருத்துவ உபகரணங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் இன்ஸ்பெக்டரான செங்குட்டுவனை அம்மு அபிராமி காதலிக்கிறார், ஒரு சந்தர்ப்பத்தில், தனது காதலை நாயகனிடம் தெரிவிக்க, அவரோ கொலை வழக்கு ஒன்றின் தீவிரத்தால், காதலை ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறார். இதனால் மனம் உடைந்த அம்மு அபிராமி தனது காதல் உணர்வுகளை பாடலாக பாடுகிறார்.

கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் வரிகளில், ““நொடிக்குள் மனம் எங்கோ போகிறதே….என்னில் ஏதோ ஆனது நீதானே…காதலே நீதானே…பூகோளம் சொல்லும் பொல்லாத பொய்தானா…“ என்கிற பாடலை, சித்தார்த் விபின் இசையில், ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் பாடியிருக்கிறார்கள். கே.ஜி. வெங்கடேஷின் ஒளிப்பதிவில், தினேஷ் மாஸ்டரின் நடனப் பயிற்சியில், இந்தப் பாடல் காட்சி, குலுமணாலியில் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது முடியும் தருவாயில் உள்ள ‘பேட்டரி’ படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

batterycinema newsGV Prakash KumarKollywood NewsManibharathitamil cinema newstamil movie battery