புதிய மெகா தொடர் ‘இலக்கியா’ – அக்டோபர் 10 ஆம் தேதி முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது

சன் TV- யில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நண்பகல் 2 மணியளவில் 8 வருடங்களாக ஒளிபரப்பாகி மக்களிடம் அதிக வரவேற்புப் பெற்ற ’சந்திரலேகா’ தொடர் அக்டோபர் 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்து அக்டோபர் 10 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணிக்கு தினமும் ’இலக்கியா’ என்ற புதிய மெகாத்தொடர் ஒளிபரப்பாகிறது.

இந்த மெகாத்  தொடரின் கதையை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத்  தொடரில் பிரபலமான தொடர்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பல கலைஞகள் பணியாற்றுகிறார்கள்.

தந்தை   கைவிட்டுப் போன நிலையில் இலக்கியாவின் குடும்பம் தாய்மாமன் மாசிலாமணி வீட்டில் அவர்களின் தயவில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது. அத்தை சிந்தாமணி எப்போதும்  அவர்களை தேளைப்போல வார்த்தைகளால் கொட்டிக்கொண்டே இருப்பாள். சிறு  வயதில் தங்களை காப்பாற்றிய தாய்மாமனுக்காக இலக்கியா அனைத்தையும் பொறுத்துக்கொள்கிறாள், தான் பல  வேலைகள் செய்து கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் அத்தையிடமே கொடுத்து விடுகிறாள்.

இதற்கிடையில் தம்பியையும் படிக்க வைத்து அம்மாவையும் காக்க போராடுகிறாள். கதையின் நாயகன் கெளதம் பெரிய தொழிலதிபர். அவனின் நட்பு இலக்கியாவிற்கு கிடைக்க, அதை பொறுத்துக்கொள்ள முடியாமல்   தாய்மாமன் மகள் அஞ்சலி பிரச்சனை செய்கிறாள். நல்ல வாழ்க்கை இலக்கியாவிற்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறாள். இலக்கியா அனைத்தையும் சமாளித்து வாழ்க்கைப் பயணத்தை எப்படி வெற்றிகரமாக தொடர்கிறாள். அத்தையின் கொடுமையிலிருந்து விடுதலையாகி எப்படி குடும்பத்தை காப்பாற்றப் போகிறாள் என்பதை இலக்கியா மெகாத் தொடர் விளக்குகிறது.

ரூபஸ்ரீ ,நந்தன்,ஹீமாபிந்து,சுஷ்மா,டெல்லிகணேஷ், சதிஷ், பரத்கல்யாண், ராணி, காயத்ரிப்ரியா, மீனா மற்றும்  முன்னணி  நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சரிகம இந்தியா லிமிட். சார்பாக பி.ஆர்.விஜயலட்சுமி தயாரிக்கும் இத்தொடரின் கதையை சரிகமா கதை இலாகா எழுதியுள்ளனர். கலைமாமணி சேக்கிழார் திரைக்கதை எழுத, குரு சம்பத்குமார் வசனம் எழுதியுள்ளார். பிரின்ஸ் இமானுவேல் கிரியேட்டிவ் ஹெட்டாக பணியாற்றும் இத்தொடரை சாய் மருது இயக்குகிறார்.

elakkiya serialSaregamaSun TVtamil mega serila elakkiya