‘பவுடர்’ பட கதாநாயகன் நிகில் முருகனுக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ வாழ்த்து!

பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், ‘பவுடர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அக்டோபர் 1 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு நிகில் முருகன் மற்றும் பவுடர் படக்குழுவினருக்கு வாழ்த்து கூறினார்கள்.

மேலும், சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்ஸ்ரீஜி உள்ளிட்ட ‘பவுடர்’ படக்குழுவினருக்கு, 65 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம்’ சார்பில் துணைத்தலைவர் மணவை பொன்மாணிக்கம், செயலாளர் ஆர்.எஸ்.கார்த்தி, பொருளாளர் மரிய சேவியர், செயற்குழு உறுப்பினர் மதிஒளி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

cinema pathririgaiyalar sangamcpsKollywood News