நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்கிறார்! – அதிர்ச்சியில் கோலிவுட்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்திருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்கள். திருமணமாகி 18 வருடங்கள் ஆகும் இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு ஆண் மகன்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தனது மனைவி அஸ்வர்யாவை பிரிய முடிவு செய்திருப்பதாக நடிகர் தனுஷ் தனது சமூகவலை தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “18 வருடங்களாக நண்பர், தம்பதி, பெற்றோர் மற்றும் நலம் விரும்பியாக நாங்க இருந்து இருக்கிறோம். எங்கள் வாழ்க்கை பயணம் பல புரிதல்களோடு நெடுந்தூர பயணமாக இருந்தது.இன்று முதல் எங்களுடைய பயணம் வெவ்வேறாக இருக்க முடிவு செய்து இருக்கிறோம். நானும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து முடிவு எடுத்து இருக்கிறோம். எங்கள் முடிவுக்கு மரியாதை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று பதிவு செய்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

தனுஷின் இந்த முடிவால் ரஜினிகாந்தின் குடும்பம் மட்டும் இன்றி கோலிவுட்டே பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.

actor dhanush divorce wife aishwaryaAishwaryaDhanushkollywood movie newsRajinikanthSuper Startamil cinema news