மைண்ட் டிராமா மற்றும் ஒயிட்டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘நினைவோ ஒரு பறவை’. இப்படத்தில் யூடியூப் பிரபலம் ஹரிபாஸ்கர் இளம் வயது கதாநாயகனாக நடிக்கிறார். ரிதுன் இயக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட இப்படத்தின் நான்காம் கட்டப்படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் முதல் காரைக்குடியில் தொடங்க உள்ளது.
இது குறித்து தயாரிப்பு நிறுவனம் கூறுகையில், ”கொரோனா பெருந்தொற்று காரணத்தால் நாங்கள் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. மனிதர்களின் உயிரை விட நாங்கள் படப்பிடிப்பை பெரிதாகக் கருதவில்லை. தற்போது சாதாரண சூழல் நிலவி வருவதால் அடுத்த மாதம் டிசம்பரில் காரைக்குடி-யில் படப்பிடிப்பை துவங்க உள்ளோம்.
அதேபோல் இந்த கொரோனா பெரும் தொற்றால் எங்கள் படத்தில் பணி புரிந்த சிலரையும் நாங்கள் இழந்து விட்டோம் அது
மிகவும் மன வேதனை அளித்தது. ஒருவழியாக அந்த துக்கங்களில் இருந்து மீண்டு, மீண்டும் புதிய உற்சாகத்தோடு அடுத்தகட்டப் படப்பிடிப்பை டிசம்பர் முதல் காரைக்குடியில் துவக்க உள்ளோம்.
’நினைவோ ஒரு பறவை’ படத்தில் இடம்பெற்றுள்ள ”மீனா மினிக்கி….”, “இறகி இறகி….”, “கனவுல உசுர….” ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீது எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் மாதம் முதல் நான்காம் கட்டப்படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ள படக்குழு, விரைவாக முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டு, 2022 ஆம் ஆண்டு படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளது.