தானாக ஒதுங்கிக்கொண்ட வரலட்சுமி..!

தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து கன்னடத்தில் அர்ஜுன், பிரசன்னாவுடன் ஒரு படம் நடித்துக்கொண்டுள்ளார் வரலட்சுமி.. இந்தப்படம் தமிழில் நிபுணன் என்கிற பெயரில் வெளியாகவுள்ளது. இன்னொரு பக்கம் மலையாள மெகாஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து ‘கசாபா’ என்கிற படத்திலும் நடித்து வருகிறார்..

இந்தப்படத்தில் கமலா என்கிற பெண் தாதாவாக நடித்துள்ளார் வரலட்சுமி. ஷூட்டிங்ஸ்பாட்டில் எப்படியோ மலையாள வசனங்களை படபடவென பேசிவிட்ட வரலட்சுமியை, நீங்களே டப்பிங்கும் ட்ரை பண்ணி பார்க்கிறீர்களா என கேட்டார்களாம்..

ஆனால் அவரோ என் குரல் அந்த கேரக்டருக்கு பொருத்தமாகத்தான் இருக்கும். இருந்தாலும் மலையாள பாஷையில் டப்பிங்கில் சரியாக என்னால் பேசமுடியாது.. இன்னும் இரண்டு படங்கள் போனால் தான் மலையாளத்தில் டப்பிங் பேசமுடியும் என தானாகவே ஒதுங்கிக்கொண்டாராம்.

Tharai ThappattaiVaralakshmiகசாபாவரலட்சுமி