சினேகன், துருவா நடிக்கும் ‘குறுக்கு வழி’


ராய்ஸ் மேட் பிரைவேட் லிமிடேட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், ’வல்லதேசம்’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் எ.டி.நந்தா இயக்கும் இரண்டாவது படம் ‘குறுக்கு வழி’.

சூப்பர் டூப்பர் படத்தின் நாயகனாக நடித்து பலரது பாராட்டை பெற்ற நடிகர் துர்வா, பிரனய் இப்படத்தின் நாயகர்களாக நடிக்க சாக்‌ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். கவிஞர் சினேகன், தீபன், ஷிரா, மிப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

என்.டி.நந்தா ஒளிப்பதிவு செய்து இயக்கும் இப்படத்தின் கலை இயக்குநராக ஆரோக்யராஜ் பணியாற்ற, கே.கே.எஸ்.ராஜா புரொடக்‌ஷன் எக்ஸிகுயூட்டிவாகவும், ஆர்.ஸ்வாமிநாதன் மேலாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கிய இப்பட்த்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

cinema newsDhuruvaKollywood Newskurukku vazhiMovie ReviewSakshi AgarwalSnehantamil movie kurukku vazhi