சர்வதேச விருதுகளை வென்ற யாஷிகா ஆனந்தின் ‘பெஸ்டி’


ஆர்.எஸ்.சினிமா என்ற பட நிறுவனம் ஓம் முருகா படப்புகழ் அசோக் குமார் மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்த ‘பெஸ்டி’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. இதில் மேலும் மாறன், அம்பானி சங்கர், சத்யன், சேஷு, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், இவர்களுடன் கௌரவ வேடத்தில் லொள்ளுசபா ஜீவா நடித்துள்ளனர்.

ஜே.வி. இசையையும், ஆனந்த் கேமராவையும், கோபி படத்தொகுப்பையும், சுரேஷ் நடனப் பயிற்சியையும், அருள்குமரன் இணைத்தயாரிப்பையும் கவனித்துள்ளனர்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் குறிப்பா கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும் வளர்ந்துள்ள இப்படத்தை சாரதிராஜா தயாரித்துள்ளார்.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ள ரங்கா படத்தைப் பற்றி கூறியதாவது, “’இளமை துள்ளலுடன் திகிலும் மர்மமும் நிறைந்த படமாக உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்தில் திகில், மர்மத்துக்கு புதிய பரிமாணத்தை காட்டியிருக்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபிறகு தான் யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கினார். அவர் இதில் கிளாமர் மட்டுமல்ல நடிப்பிலும் அசத்தி இருக்கிறார்.

இந்தப் படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு விண்ணப்பித்தோம். அதில் டொராண்டோ தமிழ் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர் ஆனந்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதினை பெற்றுத்தந்தது. அடுத்து அமெரிக்காவில் நடைபெற்ற லாஸ் விகாஸ் திரைப்பட விழாவில் யாஷிகா ஆனந்துக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

கொல்கத்தாவில் நடைபெற்ற ‘விர்ஜின் ஸ்பிரிங் திரைப்பட விழாவில் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள அசோக் அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த முறையில் கதை சொல்லல், ‘சிறந்த திரைக்கதை அமைத்தல், சிறந்த இயக்கம் என ‘பெஸ்டி’ படத்தை எழுதி இயக்கிய எனக்கு மூன்று விருதுகள் கிடைத்தது.

மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் போட்டியில் கலந்துகொள்ளவும் தேர்வாகி உள்ளது. ‘பெஸ்டி’ திரைப்படம் எனக்கு மட்டுமல்ல இதில் பணியாற்றியுள்ள தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் மிகச்சிறந்த புகழினையும், பாராட்டினையும், விருதுகளையும் பெற்றுத்தரும். விரைவில் திரையரங்குகளில் திரையிட ஏற்பாடு செய்துவருகிறோம்.” என்றார்.

actor ashokkumaractress yashika anandbestybig boss yashika anandbollywood newskollywood actressKollywood Newstamil movie bestytollywood news