இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 6, 2022) காலை தொடங்கியது, முழு படப்பிடிப்பும், சென்னையில் நடைபெறவுள்ளது. பிரவீன் சரவணன் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர், இவர் ஒளிப்பதிவாளர் சரவணனின் கீழ் பணிபுரிந்துள்ளார், மேலும் இயக்குநர் பாலாஜி மோகனிடம் மாரி 2 படத்தில் இணை இயக்குனராகவும் இருந்துள்ளார். இப்படத்திற்கு விஷ்ணுஸ்ரீ KS (ஜாம்பி படம் புகழ்) ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் தினேஷ் பொன்ராஜ் (களத்தில் சந்திப்போம்) படத்தொகுப்பு செய்கின்றார்.
இப்படத்தில் மோனிகா சின்னகோட்லா மற்றும் மானசா சவுத்ரி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கருணாகரன், ஐஸ்வர்யா தத்தா & புகழ் மற்றும் பல முன்ணனி நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.