கொடிய மனிதத்தை பற்றி பேசும் ‘கொடியன்’


கொடிய சம்பவங்களை நிகழ்த்துவதும் மனிதர்களே, மிருகங்களை விட கொடூரமாக மனித வாழ்வில் நடந்துகொண்டு மிருகங்களை கொடிய மிருகங்கள் என்று கூறும் மனிதர்கள் வாழும் பூமி இது. நாகரீகம் வளர்ந்தாலும் மனிதனுக்குள் இருக்கும் கொடூரமனம் இன்னும் அதிகமான கொடூரமானதாகவே மாறிக்கொண்டுவருகிறது.

அப்படி ஒரு கொடிய மனிதத்தை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது ‘கொடியன்’. கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது சர்வதேச விருதுகளைப் பெற்று வருகிறது.

இப்படத்தை எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ள டோனிசான் படம் குறித்து கூறுகையில், “இது வழக்கமான திரில்லர் பார்முலாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய முயற்சியை கையிலெடுத்திருக்கிறோம். அது படம் வெளியாகும் போதுதான் அது எந்த அளவுக்கு கவனம் பெருகிறது என்பது தெரியும்.” என்றார்.

இந்த படத்தில் நிவாஸ் ஆதித்தன் நாயகனாக நித்யஸ்ரீ நாயகியாக நடித்திருக்கிறார்கள். யோக் ஜேப்பி வில்லனாக மிரட்டியிருக்கிறார். மற்றும் லிசி ஆண்டனி, புதுமுகம் விக்டர் பிரபாகர் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு இசை கேபர் வாசுகி, பின்னணி இசை கிரிநந்த் -விஜய் கார்த்திகேயன் செய்திருக்கிறார்கள்.

விரைவில் தியேட்டரில் வெளியாகவிருக்கும் கொடியன் படம் பல சர்வதேச விருதுகளை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

சக்ரவர்த்தி பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நேரு நகர் நந்து தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

kodiyanKollywood NewsMovie Reviewtamil cinema newstamil movie kodiyan