காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் ‘பாலமுருகனின் குதூகலம்’


மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ’பாலமுருகனின் குதூகலம்’. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்களிடம் துணை – இணை இயக்குனராக பணியாற்றியவர்.

மாண்புமிகு தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் உயர்திரு மு.பெ.சுவாமிநாதன் அவர்களின் ஆசியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பூரில் இனிதே துவங்கியது.

புது முகம் பால முருகன் கதாநாயகனாக நடிக்கும் ‘பாலமுருகனின் குதூகலம்’ படத்தில் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கின்றார். ’குக் வித் கோமாளி’ புகழ், பிஜார்ன் சுர்ராவ், சன்சீவி கோ சுவாமி, கவிதா பாரதி, TSR, அனிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிஜார்ன் கர்ராவ் இசையமைக்கிறார். மப்பு பிரகாஷ் படத்தொகுப்பு செய்ய எல்.கோபி கலையை நிர்மாணிக்கிறார். டேஞ்சர் மணி ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க அப்சர் நடனம் அமைக்கிறார்.

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ammu abiramibalamuruganin kuthukalamcinema newsKollywood Newsmovie newsPugazhtamil cinema news