கலைஞர் டிவியில் சிவகார்த்திகேயனின் ’டான்’ – தீப ஒளித் திருநாள் சிறப்பு திரைப்படம்

கலைஞர் தொலைக்காட்சியில் தீப ஒளித்திருநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து மெகாஹிட்டான “டான்” திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் “டான்”. காமெடி, காதல் என குடும்பங்களை கவர்ந்து, 100 கோடி வசூல் சாதனை படைத்த இந்த படம் வருகிற அக்டோபர் 24-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

மேலும், தீப ஒளி தினத்தன்று, திண்டுக்கல் ஐ.லியோனியின் “சிறப்பு பட்டிமன்றமும்”, கார்த்தி நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் “சர்தார்” படத்தின் சிறப்பு பார்வையும், “சமையல் வேட்டை” சிறப்பு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக இருக்கிறது.

deepawali special movie in kalaigar tvdonkalaingar tvpriyanka mohanSivakarthikeyan