கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்! – அதிர்ச்சியில் திரையுலம்


பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 46.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், இன்று தனது இல்லத்தில் வழக்கம் போல் உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி புனித் ராஜ்குமார் உயிரிழந்தார்.

இளம் நடிகரான புனித் ராஜ்குமாரின் திடீர் மரணத்தால் ஒட்டு மொத்த இந்திய சினிமாவே பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

kannada actor punith rajkumar deathKollywood Newsmollywood actor punith rajkumarpunith rajkumar deathSuper Star