கணவரை விவாகரத்து செய்யும் சமந்தா! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்த சமந்தா, சில படங்களில் கவர்ச்சியான காட்சிகளிலும் நடித்தார்.

இதற்கிடையே, சமந்தாவுக்கும், அவரது கணவர் நாகசைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரிய இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், இது குறித்து சமந்தா மற்றும் நாகசைதன்யா தரப்பில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், சமந்தாவும், நாகசைதன்யாவும் பிரிய இருப்பதை இருவரும் கூட்டாக சேர்ந்து இன்று அறிவித்துள்ளனர்.

இது குறித்து சமந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், இருவரும் இனி ஒன்றாக வாழமுடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். எனவே பரஸ்பரமாக பேசி பிரிய முடிவு செய்துள்ளோம். இருப்பினும், திருமணத்திற்கு முன்பு இருந்த எங்களுடைய நட்பு தற்போதும் தொடரும், என்று தெரிவித்துள்ளார்.

actor nagasaidhanyaActress SamanthaAmalacinema newsKollywood NewsMovie ReviewNagarjunanagasaidhanyanagasaidhanya divorceSamanthasamantha divorcetollywood news