“என் குழந்தை பையனாகிட்டான்” ; தனுஷ் ஆச்சர்யம்..!

தனுஸ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு இன்று முக்கியமான நாள்.. அவர்களது மகன் யாத்ராவுக்கு இன்று 10வது பிறந்தநாள். ஆயுத பூஜை அதுவுமாக தனது மகனின் பிறந்தநாள் வந்ததிலும் அவருக்கு பத்து வயது ஆனதிலும் தனுஷுக்கு ரொம்பவே பெருமிதம்.. இதுபற்றிய சந்தோஷத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..

“உன்னுடைய விருப்பங்கள் பொம்மைகளிடம் இருந்து செல்போன், டேப்லட், கம்ப்யூட்டர் என மாறியது என்பதை நினைக்கும்போது நான் ஆச்சர்யப்படுகிறேன்.. இப்போது நான் உணர்கிறேன் என் மகன் குழந்தையல்ல.. பையனாகி விட்டான் என்பதை.. ஹேப்பி பர்த்டே யாத்ரா” என மகிழ்ச்சியுடன் குறிபிட்டுள்ளார் தனுஷ்.

Aishwarya R DhanushDhanushYatraதனுஷ்யாத்ரா