ஃபோக்கஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் இந்தியாவின் முதல் கடல்கன்னி திரைப்படம் தமிழில் உருவாகிறது. இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்தில் கடல்கன்னியாக
ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். கடல் கன்னி வேடத்தில் நடிக்கும் முதல் இந்திய நடிகை இவர்தான். இவருடன் சுனைனா, முனீஷ்காந்த், இந்துமதி மற்றும் 50 குழந்தைகள் நடிக்கிறார்கள்.
இப்படத்தை, மணிரத்னம் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். இவர், ‘துப்பாக்கிமுனை’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
சென்னை தி.நகரில் 50 லட்சம் மதிப்பில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து திருச்செந்தூர் மணப்பாடு என்கிற இடத்தில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிவடையும்.
அதன் பிறகு கடல்கன்னிக்கான அனிமேஷன் வேலை ஆரம்பமாகிறது. படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அனிமேஷன் பணிகளை லார்வென் LORVEN என்கிற நிறுவனம் மேற்கொள்கிறது.
பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிராஃபோர்ட் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஜான்சன் பி.ஆர்.ஓ பணியை கவனிக்கிறார்.
2022 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.