அஜ்மல் ஹீரோவாக நடிக்கும் ‘தீர்க்கதரிசி’ படம் தொடங்கியது


படத்திற்கு படம் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் பலரின் பாராட்டைப் பெற்றவர் நடிகர் அஜ்மல். தற்போது ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரிப்பாளர் B.சதிஷ் குமார் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார். ’தீர்க்கதரிசி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை P.G.மோகன் & L.R. சுந்தரபாண்டி இணைந்து இயக்குகின்றனர்.

நடிகர் அஜ்மலுடன், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பேரன் துஷ்யந்த், ’மத்திய சென்னை’, ’காட்டு பய சார் இந்த காளி’ படங்களின் மூலம் பலரின் பாராட்டை பெற்ற நடிகர் ஜெய்வந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணையும் ’தீர்க்கதரிசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் இனிதே துவங்கியது.

film newskollywood newMadhumithaMovie Reviews ajmaltamil cinema newstheerkatharishi