நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம்! – அதிர்ச்சியில் திரையுலகம்


தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா 2009* ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகும் நடித்து வந்த நடிகை மீனா, தனது மகள் நைனிகாவையும் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்து வந்தார்.

இதற்கிடையே நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த சில நாட்களாக நுரையீரல் பிரச்சனையால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

48 வயதாகும் வித்யாசாகருக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிறகு அதில் இருந்து அவர் குணமடைந்தாலும், அவருக்கு நுரையீரல் பிரச்சனை தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் வித்யாசாகர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இன்று மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்படும்.

actress meenakollywood actress meenameena husband deathmeena husband vidyasagar deathsouth indian actress meena