கார்த்தி நடிக்க, எம்.ராஜேஸ் இயக்கியுள்ள ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வின் தீபாவளி கொண்டாட்டம் அக்டோபர் 4ஆம் தேதியே ஆரம்பித்து விட்டது. தமன் இசையில் ராகுல் பாடியுள்ள ‘செல்லமே’ சிங்கிள் ட்ராக்கை கடந்த 4ஆம் தேதி வெளியிட்ட ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படக்குழுவினர் வரும் 10ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ ரிலீஸ் என தொடர்ந்து சரவெடி கொளுத்த இருக்கிறார்கள்.
கடந்த வருடம் வெளியான சகுனி, இந்த வருடம் வெளியான அலெக்ஸ்பாண்டியன் என கடைசியாக வெளியான இரண்டு படங்களும் கார்த்தியை மட்டுமல்ல, அவரது ரசிகர்களையும் ரொம்பவே ஏமாற்றியது. அதற்கெல்லாம் சேர்த்துவைத்து தீபாவளிக்கு விருந்து படைப்பார் கார்த்தி என உறுதியாக நம்பலாம். காராணம் இயக்குனர் எம்.ராஜேஸ், சந்தானம், காஜல் அகர்வால் என அவருடன் கைகோர்த்திருக்கும் கூட்டணியின் பலம் அப்படி.