இந்திய சினிமா நூறாவது ஆண்டை கொண்டாடிவரும் வேலையில் தனது 90வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் தெலுங்கின் பிரபல மூத்த நடிகர் நாகேஸ்வரராவ். திரையுலகில் இவர் கடந்துவந்த ராஜபாட்டை மிக மிக ஆச்சர்யம் தரக்கூடியது. 1924ல் பிறந்த இவர் தனது பதினேழாவது வயதிலேயே நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
ஆரம்பகாலத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மாறிமாறி நடித்துவந்த இவர், ஒருகட்டத்தில் தெலுங்கிலேயே நிரந்தரமாக தங்கி ஆந்திர சினிமாவின் சூப்பர்ஸ்டாராகவும் கொடிகட்டிப் பறந்தார். இவரது மகன் தான் நாகர்ஜூனா என்பது நாம் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. இன்று பிறந்தநாள் காணும் மதிப்பிற்குரிய நாகேஸ்வரராவுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.