4-வது முறையாக அஜித்-சிவாவின் ‘விசுவாச’ கூட்டணி..!

140

ajith - siva 1

இயக்குனர் சிறுத்தை சிவா-அஜித் கூட்டணி வீரம் படத்தில் அதிர்ஷ்டவசமாக கிளிக் ஆனாலும் ஆனது, சிவாவுக்கு வேறு நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பே தராமல் தனது பட வாய்ப்புகளையே தரும் அளவுக்கு அவரை தனது ஆஸ்தான இயக்குனர் ஆக்கிவிட்டார் அஜித்..

அது மட்டுமல்ல படத்தின் டைட்டிலில் இடம்பெற்ற ‘வி’ சென்டிமென்ட்டையும் கெட்டியாக பிடித்துக்கொண்டு அவர்கள் கூட்டணியில் உருவான இரண்டாவது படத்திற்கு ‘வேதாளம்’ என்றும் தற்போது இயக்கி வரும் மூன்றாவது படத்திற்கு ‘விவேகம்’ என்றும் டைட்டில் வைத்தார்கள்..

அந்தப்படமும் ஹிட்டடிக்க இப்போது நான்காவது முறையாக அஜித்-சிவா கூட்டணி இணைகிறது. படத்தின் டைட்டிலும் ‘விசுவாசம்’ என ‘வி’ சென்டிமென்ட்டில் இருந்து விலகாமலேயே வைத்துள்ளார்கள்.. ஜனவரி மாதம் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 2018 தீபாவளி அன்று ‘விசுவாசம் வெளிவரும் என இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அறிவித்துள்ளார்..

Comments are closed.