திரும்பவும் புது பைக் வாங்கிட்டார் அஜீத்

38

பிரிக்கமுடியாதது எது என்று கேட்டால் அஜீத்தும் பைக்கும் என்று சொல்லும் அளவுக்கு அஜீத் ஒரு பைக் ரேஸ் பிரியர் என்பது ஊரறிந்த விஷயம். மார்க்கெட்டில் அதிநவீன பைக்குகள் இறக்குமதியானால் முதல் நபராக அதை சென்று பார்ப்பவர், பிடித்து விட்டால் என்ன விலை என்றாலும் வாங்கி விடுவார்.

அப்படி கடந்த சில தினங்களுக்கு முன் ரூ.24 லட்சம் மதிப்பில் BMW S1000RR ரக டுக்காட்டி பைக் ஒன்றை வாங்கிய அஜீத், அதில் பெங்களூர் வரை ஒரு விழிப்புணர்வு பயணமும் போய்வந்தார்.

தற்போது இரண்டு தினங்களுக்கு முன் லேட்டஸ்டாக Aprilia Caponord 1200 என்கிற இன்னொரு புது மாடல் பைக் ஒன்றையும் வாங்கி தனது பைக் கலெக்‌ஷனில் சேர்த்துள்ளார் அஜீத். இந்த பைக்கையும் எடுத்துக்கொண்டு விரைவில் சென்னை நகர வீதிகளில் அஜீத் உலா வரலாம்.. ஏதாவது ஒரு ஹைவேஸ் ரோட்டுக்கடையில் அமர்ந்து ரசிகர்களுடன் ஹாயாக டீ குடித்தாலும் குடிக்கலாம்… ஆச்சர்யம்.. அதன் இன்னொரு பெயர்தானே அஜீத்.

Leave A Reply

Your email address will not be published.