கிறிஸ்துமஸ் பண்டிகையை முடித்த கையோடு ஷாலினி, மகள் அனோஷ்கா, மற்றும் ஷாலினியின் சகோதரர் ரிச்சர்டு, சகோதரி ஷாமிலி என நாவரையும் அழைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு பறந்துவிட்டார். ஆஸ்திரேலியாவில் தான் புதுவருட ஆரம்பத்தையும் தனது மகளின் பிறந்தநாளையும் கொண்டாட இருக்கிறார் அஜித்.
ஆஸ்திரேலியா சென்றதுமே சிட்னியில் இருந்து வெலிங்டன் வரையிலான கடல் பயணத்தில் தன்னை இணைத்துக்கொண்டும் விட்டார். இந்தக் கடல் பயணத்தின்போது கப்பலிலேயே புது வருடத்தையும் தனது மகளின் பிறந்தநாளையும் கொண்டாட திட்டமிட்டுள்ளார் அஜித். புத்தாண்டு மற்று தனது மகளின் பிறந்தநாள் இரண்டையும் கொண்டாடிவிட்டு ஜனவரி 9ஆம் தேதி தான் சென்னைக்கு திரும்புகிறார். அதற்கு மறுநாள் தான் ‘வீரம்’ ரிலீஸாகிறது.
‘வீரம்’ படத்தில் தன் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுத்துவிட்ட அஜித், இங்கிருந்து கிளம்புவதற்கு முன் ‘வீரம்’ படத்தை ஒரு முறை பார்த்தார். முழு திருப்தியுடன் தயாரிப்பாளரையும் இயக்குனர் சிறுத்தை சிவாவையும் நேரில் சந்தித்து தனக்கு ஒரு அருமையான படம் தந்ததற்காக பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். அத்துடன் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் போன் செய்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவிட்டே ஆஸ்திரேலியா பறந்திருக்கிறார்.