உலக அழகி பட்டம் கொடுத்து எத்தனை வருடம்தான் ஆகட்டுமே. ஐஸ்வர்யா ராய் மீதான ரசிகர்களின் ஈர்ப்பு ஒருபோதும் குறையப்போவதில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. இதற்கு சமீபத்தில் லூதியானாவில் நடந்த சம்பவமே சாட்சி. லூதியானாவில் ஒரு நகைக்கடை திறப்புவிழாவுக்கு வருகைதந்த ஐஸ்வர்யா ராயை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சுற்றிவளைத்தனர். ஒருகட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிய ஐஸ்வர்யா தடுமாறி கீழேவிழவும் போனார்.
இதனால் விழா மூடிலிருந்து கோபமான மூடுக்கு மாறிய ஐஸ்வர்யா ராய், மீடியாக்களை சந்திக்காமல் கூட விறுவிறுவென சென்றுவிட்டார். ஆனாலும் இணையதள சாட்டிங்கில் மீடியாவுடன் பேசிய அவர், “லூதியானாவுக்கு நான் வருவது இதுதான் முதல்முறை. அங்கே கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து அவர்களது அன்பில் திக்குமுக்காடிப் போய்விட்டேன்” என்று சாந்தமான மூடில் பதிலளித்திருக்கிறார் ஐஸ்வர்யாராய்.