‘மைனா’வுக்குபின் விதார்த் தொடர்ந்து நடித்த பல படங்களில் நடித்தாலும், வெற்றி என்னவோ அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘ஆள்’ திரைப்படம் அனைத்து சென்டர்களிலும் அமோக வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் மிகச்சிறந்த நடிப்பை விதார்த் வெளிப்படுத்தி இருந்தார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
விதார்த், தற்போது ‘காடு’ என்கிற இன்னொரு வித்தியாசமான படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக கேரள வரவான சமஸ்கிருதி என்ற புதுமுகம் நடிக்கிறார். கேகே இசையமைபில் உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தர்மபுரி மாவட்டம், அரூர் அருகில் உள்ள மலைகிராமம் ஒன்றில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடைபெற்றிருக்கிறது. இந்தப்படத்தின் இயக்குநர் ஸ்டாலின் ராமலிங்கத்தின் சொந்த ஊரும் இதுதானாம்..
Comments are closed.