நடிகை கஜாலா மீண்டும் எண்ட்ரி..!

97

Related Posts

நடிகை கஜாலாவை ஞாபகம் இருக்கிறதா..? ‘யுனிவர்சிட்டி’, ‘ராம்’, ‘ஏழுமலை’ உட்பட பல படங்களில் நடித்தவர். அதிலும் அமீர் இயக்கிய ‘ராம்’ படம் கஜாலாவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது. 2008ல் தமிழில் வெளியான ‘துரை’ படத்தில் கடைசியாக நடித்தவர், அதன்பின் சமூகநலம் பற்றி படிப்பதற்காக வெளிநாடு போய்விட்டார்.

தற்போது படிப்பை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக திரும்பியுள்ளார் கஜாலா. அத்துடன் சமூக சேவையையும் தொடர உத்தேசித்துள்ளாராம். மீண்டும் ஏன் சினிமாவிற்கே வந்துள்ளீர்கள் என கஜாலாவிடம் கேட்டால், “நம் நாட்டில் உள்ள நூறு கோடி பேரில் வெகுசிலருக்கே பிரபலமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிர்ஷ்டவசமாக எனக்கும் அது சினிமா மூலமாக கிடைத்துள்ளது. அதை தக்கவைத்துக்கொண்டு எனது சமூகசேவையை தொடர விரும்புகிறேன்” என்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.