மறைந்த தமிழ் இயக்குனர் பீம்சிங்கிற்கு ஒரு செண்டிமெண்ட் உண்டு. அதாவது தனது படங்களுக்கு பாசமலர், பாகப்பிரிவினை, பார்த்தால் பசிதீரும் என ‘பா’வில் பெயர் ஆரம்பிக்கும்படி பார்த்துக்கொள்வார். அந்தப்படங்களும் சூப்பர் ஹிட்டாக ஓடி வசூலை வாரிக்குவித்தன. அதேபோல டோலிவுட் இளவரசன் மகேஷ்பாபுவுக்கும் இந்தப்பெயர் ராசி நன்றாகவே பொருந்துகிறது.
மகேஷ்பாபு நடித்த ஒக்கடு, அத்தடு, சைனிக்கூடு, தூக்குடு, சமீபத்தில் வெளியான சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு என ‘டுவில் முடியும் படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் ஆனவைதான். இது மகேஷ்பாபுவிற்கு எதேச்சையாக கூட அமைந்திருக்கலாம். ஆனால் இப்போது மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படத்துக்கு ‘ஆகடு’ என பெயர் வைத்திருக்கிறார்கள். இதுவும் ‘டு’ செண்டிமெண்ட்டில் தான் அமைந்திருக்கிறது. நவம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கும் இந்தப்படமும் சூப்பர்ஹிட்டாகும் என நம்புவோம்.
இன்னொரு தகவல்.. ஆகடு படத்தை தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தை யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தை பிரபாஸ் நடித்த ‘மிர்ச்சி’ படத்தை இயக்கிய கொரட்டாலா சிவா இயக்குகிறார். இந்தப்படத்திற்கும் ‘டு’வில் முடியுமாறு பெயர் வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.