விஷால் ஃபிலிம் பேக்ட்ரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியிருக்கும் நடிகர் விஷால் தன் முதல் தயாரிப்பான ’பாண்டிய நாடு’ படத்தை சுசீந்தரனை வைத்து எடுத்து, அதில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா இன்று(13/10/2013) நடந்தது. இதில் பேசிய விஷால், “சுசீந்தரன் வந்து கதை சொல்லிட்டுப் போன அன்னைக்கு ராத்திரி என் அண்ணன்கிட்ட இந்த படத்தை நாமலே தயாரிக்கலாம். என் பேர்ல கம்பெனியை பதிவு பண்ணுங்கனு சொல்லிட்டேன். ஆனால் அப்ப என்கிட்ட ஒரு பைசா கூட கிடையாது. இப்ப தொண்ணூறு நாள்ல படத்தை முடிச்சிட்டோம். எல்லாரும் கடுமையா உழைச்சிருக்காங்க.
சென்ஸார் சர்ட்டிபிகேட்டை ஜெராக்ஸ் எடுக்குறது முதல் எல்லாத்தையும் நானே செய்வேன். காரணம் எங்க அப்பா நான் உதவி இயக்குனரா சேர முதுகு வலிக்க நின்னு வாய்ப்பு வாங்கித் தந்தவர். எல்லாம் நீங்கலாம் இந்த வேலையை செய்யக் கூடாதுனு சொன்னாங்க. ஆனால் நான் அதை செய்ய விரும்பினேன். அப்பதான் கஷ்டம் தெரியும். அதே போல என் கம்பெனியில புதுசா வர்ற இயக்குனர்களுக்கு, டெக்னீஷியன்களுக்குதான் வாய்ப்பு கொடுப்பேன்.” என்று பேசினார்.