தந்தை பிறந்தநாளில் சாகசம் பண்ணிய அருண் விஜய் மகன்..!

228

arun vijay son
தமிழில் அஜித்துக்கு வில்லனாக நடித்த ராசியோ என்னவோ, அதன்பின் தெலுங்கில் ராம்சரணுக்கு ஜோடியாக ‘புரூஸ்லீ’ என்கிற படத்திலும் வில்லனாக நடித்தார் அருண்விஜய். தற்போது ‘சக்ரவியூகா’ என்கிற கன்னடப்படத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்துவருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

இதன் படபபிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கும்போதுதான் அருண் விஜய்யின் பிறந்தநாளும் வந்தது. வழக்கமாக பிறந்தநாளன்று படப்பிடிப்புக்கு லீவு போட்டுவிடும் விஜய் இந்தப்படத்தின் படப்பிடிப்பை வேகமாக முடிக்கவேண்டும் என படக்குழுவினர் கருதியதால் சென்னைக்கு வராமல் பெங்களூரிலேயே இருந்துவிட்டார்.

இதனால அவரது மனைவி தங்களது நான்கு வயது மகன் ஆர்னவை அழைத்துக்கொண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பெங்களூர் வந்துவிட்டார். பிறந்தநாளன்று அருண்விஜய்யின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற அருண்விஜய்யின் மகன், அங்கே தனது தந்தை சண்டைக்காட்சியில் நடிப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறான்.

அருகில் நின்றிருந்த ஸ்டண்ட் மாஸ்டரிடம் என்னாலும் இப்படி சண்டைபோட முடியுமா என கேட்டுள்ளான். உடனே அவன் முதுகில் கயிற்றை கட்டிய ஸ்டண்ட் மாஸ்டர், அவனை கீழிருந்து பத்தாவது மாடிக்கு ரோப் மூலமாக இழுக்க வைத்துள்ளார். அவ்வளவு உயரத்திலும் கொஞ்சம் கூட பயப்படாமல் அசராமல் இருந்த அவன் தான் ஷூட்டிங்ஸ்பாட்டில் அன்றைய நாளின் ஹீரோவாகிப்போனான்.

Comments are closed.