‘நம்பியார்’ படத்திற்கு U/A சான்றிதழ்

249

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார். யாராலும் மறக்க முடியாத இவர் பெயரில் தற்போது ஒரு படம் தயாராகியுள்ளது. ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். படத்திற்கு இன்னொரு பலமாக முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் சந்தானம்.

விஜய்ஆண்டனி இசையமைக்கும் இந்தப்படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார் சந்தானம். பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் கதை இலாகாவில் பணிபுரிந்த கணேஷா இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். அறிவியல் களம் சார்ந்த, ஆனால் முழுக்க முழுக்க காமெடி படமாக ‘நம்பியார்’ உருவாகியுள்ளது.

1 Comment
  1. Thermage says

    847743 228546Just wanna remark which you have a quite nice web internet site , I enjoy the layout it truly stands out. 262051

Leave A Reply

Your email address will not be published.