மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்..!

209

க்யூப் உள்ளிட்ட டிஜிடல் சர்வீஸ் வழங்கும் நிறுவனங்கள் தங்களது விபிஎப் கட்டணத்தை குறைக்கவேண்டும் என கூறி கடந்த நாற்பது நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். அந்தவகையில் க்யூப் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு செக் வைக்கும் விதமாகவும், புதிய மாற்று ஏற்பாடுகளை உருவாக்கும் விதமாக முனைப்பு காட்டி செயல்பட்டு வருகிறார்கள் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்.

அந்தவகையில் தயாரிப்பாளர் சங்கத்தின் சொந்த மாஸ்டரிங் வசதியுடன் DCI 2k , 4k ப்ரஜெக்டர்கள் மற்றும் சர்வர்கள் வழங்க ​​டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடர் மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது மாபெரும் மைல்கல் ஆகும்.

இதன்மூலம் தயாரிப்பாளர் சங்கத்தில் இனிமேல் அனைத்து படங்களுக்கும் மாஸ்டரிங் செய்யப்பட்டு அனைத்து தியேட்டர்களுக்கும் நேரடியாக கன்டன்ட் கொடுக்கப்படும் என்றே தெரிகிறது.

Comments are closed.