2 கோடி ரூபாய் மதிப்பில் சிறைச்சாலை – ‘புறம்போக்கு’ ஹைலைட்ஸ்

95


‘புறம்போக்கு’ படத்திற்காக ஆர்யா, ஷாம் சம்பந்தப்பட்ட சேசிங் காட்சிகளை பெங்களூரில் படமாக்கிவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். ஏர்போர்ட்டில் மிகப்பெரிய அளவில் படமாக்கப்பட்ட இந்தக்காட்சியில் ஹெலிகாப்டரை பயன்படுத்தி காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

இதேநேரத்தில் சென்னையில் மிகப்பெரிய பிரமாண்டமான ஜெயில் செட் ஒன்றை உருவாக்குவதில் ஆர்ட் டைரக்டர் செல்வகுமார் தலைமையிலான டீம் ஒன்று ராப்பகலாக உழைத்துவருகிறது. ஏற்கனவே ‘மதராசபட்டிணம்’ படத்தில் ஆர்ட் டைரக்ஷனில் நம்மை அசத்தியவர்தான் இந்த செல்வகுமார்.

படத்தின் பெரும்பகுதி காட்சிகள் இந்த சிறைச்சாலையில் எடுக்கப்படுவதால் கிட்டத்தட்ட இரண்டுகோடி ரூபாயை இதற்காக ஒதுக்கியிருக்கிறார்களாம். படத்தை தயாரிப்பது யுடிவி நிறுவனம் என்பதால் செலவைப்பற்றி கவலைப்படுவார்களா என்ன..?
ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் கார்த்திகா சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்த செட்டில் அதிகம் படமாக்கப்பட இருக்கின்றன..

இந்தப்படத்திற்காக பிரத்யேகமாக மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்றுவருகிறார் கார்த்திகா. ஏப்ரல் மாத மத்தியில் இந்த செட்டில் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது.

Comments are closed.