இந்த தீபாவளிக்கு அஜீத், கார்த்தி, விஷால் படங்கள் மட்டுமே ரிலீஸ் ரேஸில் இருக்கின்றன. ரஜினியின் கோச்சடையானும், கமலின் விஸ்வரூபம்-2 வும் இந்த தீபாவளிக்கு வெளியாகவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். கோச்சடையானை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். கமல் தற்போது விஸ்வரூபம்-2 படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். அதனால் அதன் ரிலீஸ் தேதியையும் உறுதியாக சொல்ல முடியாது.
ஆனால் கமல் ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் விஸ்வரூபம் படத்தை(அதாவது முதல் பாகத்தை) தீபாவளி தினத்தனறு ஒளிபரப்பி புண்ணியம் கட்டிக்கொள்ள இருக்கிறது விஜய் டி.வி. டி.டி.எச் மூலமாக விஸ்வரூபம் படத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கமல் எடுத்த முயற்சி ஆரம்பத்திலேயே முடங்கிப் போனாலும் தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாகும் விஸ்வரூபம் அந்தக் காயங்களுக்கு மருந்து போடும் விதமாக இருக்கும்.