நட்டி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

134

natty-movie03
எஸ்.ஜே.எஸ். பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சாய் சரவணன் நட்டி நடராஜ் கதாநாயகனாக காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை தயாரிக்கிறார்.

சாய் சரவணன் பல படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர். இந்தப்படத்தை தயாரிப்பதின் மூலம் புதிய தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கி தமிழ்த்திரையுலகிற்கு புதிய இயக்குனராக அறிமுகமாகிறார்.

முக்கிய வேடத்தில் ராம்கி நடிக்கிறார். முன்னணி கதாநாயகிகளில் ஒருவரை நாயகியாக நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்துவருகிறது. மற்றும் இந்தப் படத்தில் மனோபாலா ரவிமரியா மொட்டை ராஜேந்திரன் ஜார்ஜ் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரேகா சுரேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

natty-movie02

ஓளிப்பதிவு இயக்குனராக தேவராஜ் பணியாற்றும் இப்படத்திற்கு சத்திய தேவ் இசையமைக்கிறார். வசனத்தை கீர்த்தி வாசன் எழுத, பாடல்களை மக கவி, வெள்ளத்துரை ஆகியோர் எழுதுகிறார்கள். பாசில் படத்தொகுப்பை கவனிக்க, ராதிகா நடனம் அமைக்கிறார்.

இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தும் அந்தமானில் படமாக கப்படவிருக்கின்றது மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அந்தமான் ஊட்டியை அடுத்துள்ள கூடலூர் தேவாலா பந்தலூர் போன்ற பகுதிகளில் நடந்து வருகிறது.

natty-movie01

Comments are closed.