அஜீத் குமாரின் 54ஆவது படமாக விஜயா productions சார்பில் திருமதி பாரதி ரெட்டி தயாரிக்க, சிவாவின் இயக்கத்தில் தயாராகும் படத்துக்கு ‘வீரம்’ என பெயர் சூட பட்டு உள்ளது. வ, வி, ஆகிய எழுத்துக்களில் ஆரம்பித்த அஜீத் குமாரின் முந்தைய படங்களான வாலி, வில்லன், வரலாறு, ஆகிய படங்களை தொடர்ந்து வரும் படம்தான் ‘வீரம்’. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் ‘வி’ என்ற எழுத்தில் துவங்குவது நல்ல துவக்கமே. படத்தின் ஒரு முக்கிய கட்டமான ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு சண்டை காட்சிக்காக ஓடிஷாவில் உள்ள ராயகடா என்னும் ஊரில் ஏராளமான பொருட்செலவில் தயாராகி வரும் ‘வீரம்’ பொங்கல் அன்று திரைக்கு வருவது உறுதி என தயாரிப்பு நிறுவனத்தின் செய்தி குறிப்பு கூறுகிறது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படத்தின் ‘First look’ வெளியடபடுகிறது என்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.